மோடியை புகழ்ந்து தள்ளிய புதின்!

ரஷ்யா சென்று சேர்ந்த பிரதர் நரேந்திர மோடியை அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மேண்டொரோவ் வரவேற்றார். விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பின்னர் தலைநகர் மாஸ்கோவுக்கு வெளியே அமைந்துள்ள ரஷ்ய அதிபரின் இல்லத்தில் பிரதமர் மோடியும், அதிபர், விளாடிமிர் புதினும் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த புதின்இ மோடி மீண்டும் தேர்வானது ஒரு விபத்தல்ல மாறாக அவரது பல ஆண்டு உழைப்பின் பலன் என பாராட்டினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட கருத்தாக்கங்கள் இருப்பதாகவும், அவர் மிகவும் சுறுசுறுப்பானவராக, இந்திய மக்களுக்கு தேவையான பலன்களை அடைய கூடியவராக இருப்பதாகவும், அவை வெளிப்படையாக தெரிவதாகவும் புதின் புகழாரம் சூட்டினார்.

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்குவதாக புதின் தெரிவித்ததாக ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்திய மக்கள் தாய்த் திருநாட்டிற்கு சேவையாற்ற தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய மக்களுக்கு சேவையாற்றுவதற்கே மோடி தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பதாக புதின் கூற அதை அமோதித்த பிரதமர் மோடி, தமக்கு ஒரே குறிக்கோள் தமது நாடும், மக்களும் தான் என குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இரண்டு தலைவர்களும் ரஷ்ய அதிபரின் இல்லத்தை சுற்றிப் பார்த்தனர். புதின் பிரதமர் நரேந்திர மோடியை மின்சார காரில் அழைத்துச் சென்றார். பெரும்பாலும் இருவரும் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் பேசிக்கொண்டனர். இருப்பினும் காரைவிட்டு இருவரும் பூங்காவை நோக்கிச் செல்லும்போது யாரும் இல்லாமல் இருவரும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டனர். தம்மை இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்த ரஷ்ய அதிபருக்கு பிரதமர் மோடி தமது எக்ஸ் தள பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்கி இருப்பதாகவும் பிரதமர தமது பதிவில் கூறியுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!