எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி!

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு வருகை தந்தார்.

அங்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பயணம் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, “நாட்டின் பொருளாதாரத்திற்கு கொங்கு பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. யாத்திரையை வெற்றிகரமாக நடத்தியுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். 2024ம் ஆண்டில் தமிழ்நாடு புதிய சரித்திரத்தை படைக்கும். இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி தமிழ்நாட்டிற்கு உள்ளது

என்னை மிகவும் கவர்ந்த மொழியாக தமிழ் திகழ்கிறது. வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. நான் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள்” என பெருமையாக தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!