உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

நள்ளிரவு முதலே வெற்றிக் கொண்டாட்டங்கள் கலை கட்டிவரும் நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி வீரர்களுக்கு மோடி வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், ‘ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக இந்த பிரமாண்ட வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த நாள் உங்களில் அபாரமான ஆட்டத்தால் 1.40 கோடி இந்தியர்களை பெருமைப்பட வைத்துளீர்கள். உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்களின் மனதையும் நீங்கள் வென்றுளீர்கள். இந்த சிறப்பான தருணம் என்றும் நினைவுகூறப்டும்.

இது சாதாரணமான விஷயம் அல்ல. ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறியுளீர்கள். எனது சார்பாக உங்களுக்கு அளப்பரிய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை இந்திய வீரர்களுக்கு தொலைபேசியிலும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மோடி.

Related posts

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த அணிகள்!