மிஷன் திவ்யாஸ்திரா திட்டம் சக்ஸஸ்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா நேற்று அக்னி 5 திவ்யாஸ்திரா சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த அதிநவீன தொழில்நுட்பம் உள்ள நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதை அடுத்து, இத்திட்டம் வெற்றி அடைந்ததன் மூலம் நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்திற்காக பணியாற்றிய நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (DRDO) விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!