2024ஆம் ஆண்டில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தான் அற்புதம் நிகழுப் போகிறது ..

துலாம்:

துலாம் ராசிக்காரர்களே, இந்த புத்தாண்டில் குருபகவான் உங்களுக்கு நல்ல சுப பலன்களை வாரி வழங்க காத்திருக்கிறார். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே, 2024ஆம் ஆண்டு உங்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப்போகிறது. செய்யும் தொழில் சிறக்கும்.பணவரவு அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக அமையும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே, 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும். எனவே அதிகமாக உழைக்க தயாராக இருங்கள்.எதற்காகவும் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படித்தால் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைய முடியும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடி வரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே 2024ஆண்டு முழுவதும் உங்களுக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும், அரசாங்க உதவியும் கிடைக்கும். தொழில் இடமாற்றம் ஏற்படும். மாணவ, மாணவிகள் நன்கு படிப்பர். நல்ல மதிப்பெண்கள் பெரும் காலம்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே, உங்களுக்கு சற்று வேலை பளு அதிகமாகவே இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப்போகிறது. உங்களுக்கு நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் அள்ளித்தரப்போகும் ஆண்டு இது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல முடியும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024