அமெரிக்க நகருக்கு மெஸ்ஸி குடிபெயர்ந்ததால் பல கோடிகளுக்கு உயர்ந்த வீட்டின் மதிப்பு ..

அமெரிக்காவின் புளோரிடாவில் லியோனல் மெஸ்ஸி குடியேறியதால், அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் வீடு பல மடங்கு மதிப்பிற்கு உயர்ந்துள்ளது.

அர்ஜென்டினாவின் கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் இருந்து அமெரிக்க கிளப் அணியான இன்டர் மியாமியில் இணைந்து விளையாடி வருகிறார்.

இதனால் அவர் பாரிசில் இருந்து புளோரிடாவுக்கு இடம்பெயற வேண்டிய கட்டாயம் உண்டானது.

அதன்படி, Fort Lauderdale-வில் 8.4 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான சொத்தினை மெஸ்சி வாங்கினார்.

பணக்காரர்கள் நிறைந்த அந்த பகுதியில் Patrick Bet-David-வும் ஒருவராவார். இவர் இரு Youtube சேனல்களை நடத்தி வருகிறார்.

இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தங்களுக்கு அருகில் மெஸ்ஸி குடியேறியதால், தங்களின் வீட்டின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘இதுவரைஇ இன்றைய காலநிலையின்படி, நான் ஏற்கனவே எனக்கு சொந்தமான வீட்டில் 25 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் 208 கோடி) Equity செய்துள்ளேன்.

மெஸ்ஸி இப்போதுதான் என் வீட்டிற்குப் பக்கத்தில் குடிபெயர்ந்தார். எல்லோரும் எங்கள் சமூகத்தில் இருக்க விரும்புகிறார்கள்.

இது ஒரு தீவில் உள்ள நுழைவாயில் சமூகம், மிகவும் பாதுகாப்பான ஒரே ஒரு வழி உள்ளது. கடவுள் விரும்பினால் அது இன்னும் உள்ளது.

இப்போது மெஸ்ஸி அங்கு இருப்பதால் அனைவரும் தங்கள் படகில் வீடுகளைப் பார்க்க வருகிறார்கள். நாங்கள் நன்றாக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸி வாங்கியுள்ள சொகுசு வீட்டில் 10 படுக்கையறைகள், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி மாற்று Spa அறை போன்ற வசதிகள் உள்ளன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!