அமுல்ப்படுத்தவுள்ள தட்டம்மை தடுப்பூசி திட்டம்

இலங்கையில் 09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான பிள்ளைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி திட்டம் அமுல்படுத்தபடவுள்ளது.

இந்நிலையில் இன்று (20) மற்றும் நாளை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தட்டம்மை தடுப்பூசி பெறாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட முடியும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற தட்டம்மை நோய்த்தடுப்பு திட்டத்தை மேலும் செயல்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!