அதிகரித்து வரும் தட்டம்மை நோய்…

இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக 6-9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை ஒரு டோஸ் வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை,காலி,மாத்தறை,கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பரவி வருகின்றது.

தடுப்பூசி திட்டம் ஜனவரி 6ம் திகதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும்.

2019 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இலங்கையை தட்டம்மை நோயை ஒழித்த நாடாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!