வங்கதேசத்தை துவம்சம் செய்த மார்ஷ்! 177 ரன்கள் விளாசல்

வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் லித்தன் தாஸ், டன்சிட் ஹசன் தலா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹுசைன் 45 ரன்களில் ஆட்டமிழக்க, டவுஹிட் ஹிரிடோய் அதிரடியாக 79 ரன்கள் விளாசினார்.
அடுத்து வந்த வீரர்களும் தங்கள் பங்குக்கு ரன்கள் சேர்க்க வங்கதேசம் 306 ஸ்கோர் எட்டியது.
அப்போட் மற்றும் ஜம்பா தலா 2 விக்கெட்களும், ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஹெட் 10 ரன்களில் வெளியேற, வார்னர் அரைசதம் அடித்தார்.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் ருத்ரதாண்டம் ஆடினார். சிக்ஸர், பவுண்டரி என விளாசிய அவர், அதிரடியாக சதம் அடித்தார்.
அவருக்கு பக்க பலமாக ஆடிய ஸ்மித் அரைசதம் கடந்தார். இவர்களின் அபார ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணி 45வது ஓவரிலேயே 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மார்ஷ் 132 பந்துகளில் 177 ரன்களும், ஸ்மித் 64 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!