பயிற்சிக்காக சென்ற கடற்படை வீரர்கள் மரணம்

அமெரிக்காவில் பயிற்சிக்காக கடற்படை வீரர்கள் ஐவர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினது பரபரப்பை ஏற்படுத்தியது.

கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில்,காணாமல் போன ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் கடற்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் 20 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் வழக்கமான விமானப் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர் என அமெரிக்க மரைன் கார்ப்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால், ஹெலிகாப்டரின் நிலை மற்றும் கடற்படையினர் நெவாடாவில் இருந்து புறப்பட்ட நேரம் அல்லது அவர்கள் சான் டியாகோவில் தரையிறங்க திட்டமிட்ட நேரமும் வெளியிடப்படவில்லை.

தற்போது அவர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. Donovan Davis (21), Sgt.Alec Langen (23), Captain Benjamin Moulton (27), Captain Jack Casey (26) மற்றும் Captain Miguel Nava (28).

இதுதொடர்பான விசாரணையில், லாஸ் வேகாஸ் நகருக்கு அருகில் உள்ள Creech விமானப்படை தளத்தில் இருந்து San Diegoவில் உள்ள Marine Corps Air Station Miramar-க்கு பயிற்சிக்காக சென்ற ஹெலிகாப்டரில் அவர்கள் சென்றது தெரிய வந்தது.

இந்த விபத்து குறித்து HMH-361’யின் Commanding Officer லெப்டினன்ட் கர்னல் நிக்கோலஸ் ஜே.ஹார்வி கூறுகையில்,

”இப்போது எங்களின் முதன்மையான முன்னுரிமை என்னவென்றால் மாவீரர்களின் குடும்பங்களை ஆதரிப்பதாகும். மேலும் அவர்களின் துக்கப்படுக்கையில் உங்களின் மரியாதையையும், புரிதலையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!