“மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்” எனும் தொனிப்பொருளில் பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றையதினம் கிளிநொச்சியில் ‘மலையகம் 200’ நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வில், zee தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில், தன் திறமையை வெளிப்படுத்திய ‘மலையகக் குயில்’ அசானி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜுவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.