மஹிந்த ராஜபக்ஷ சீனா விஐயம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.

பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளார்.

சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை மஹிந்த சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிப்பார்.

மேலும், சீனா மற்றும் சீனாவின் எக்சிம் வங்கி அளித்த உதவிக்கு தனது நன்றியை அவர் அங்கு வெளிபடுத்துவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!