34 வயது நபரை பிரான்ஸின் பிரதமராக அறிவித்த மேக்ரான்

பிரான்ஸ் நாட்டின் பிரதமராக 34 வயது நபரான கேப்ரியல் அட்டால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) என்பவர் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்தவர். 2017ஆம் ஆண்டில் இவர் நாடாளுமன்ற உறுப்பினார்.

அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் ஆக பணியாற்றினார்.

 

பின்னர் சிறிது காலம் நிதி அமைச்சராகவும் இருந்த கேப்ரியல் தற்போது பிரதமராகியுள்ளார்.

இதன்மூலம், பிரான்ஸ் வரலாற்றில் இளம் வயதில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட முதல் நபர் என்கிற பெருமையை கேப்ரியல் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தன்னை ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் ஆவார்.

முன்னதாக, பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் (Elisabeth Borne) 20 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!