புதிய பாதுகாப்பு செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ..

புதிய பாதுகாப்பு செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதம் அதற்கான நியமனம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்பாதுகாப்பு செயலாளர் பதவியில் தற்போது மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பணியாற்றி வருகிறார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இலங்கையின் 20ஆவது இராணுவத் தளபதியாக கடமையாற்றினார்.

இவர் இலங்கை ஆயுதப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராணுவ தளபதி ஆவார்.

2019 இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!