இந்தியாவில் மக்களவை தேர்தல்: வெளிவந்த தகவல்

இந்தியாவில் மக்களவை தேர்தல் அறிவிப்பு எப்போது வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் மும்பரமாக செயல்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு முன்பு வெளியான பல கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் இந்த முறை 100 சீட்டுகளை தாண்டுவது கஷ்டம் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

அதே சமயம், மாநிலம் வாரியாக நடைபெறும் தேர்தல் தொடர்பான ஆய்வுகள் முடிவதற்கு மார்ச் முதல் வாரம் ஆகும் என்பதால், மார்ச் 2வது வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாம்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!