வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் என்ன?

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான மொத்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். புதுச்சேரி தொகுதியில் 26 பேர் போட்டியிட்டனர்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

மேலும், மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், சுமார் 270 கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்களின் முகவர்களும் சுழற்சி முறையில் மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை (ஜூன் 4) வாக்குகள் எண்ணும் பணி காலையில் திட்டமிட்ட நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதனையொட்டி, வாக்குகள் எண்ணும் மைய பகுதியில் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்கள் என ஏராளமானோர் கூடும் சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் சீலிடப்பட்ட அறை (ஸ்ட்ராங் ரூம்), வாக்குகள் எண்ணும் அறை, அறையின் வெளிப்பகுதி, மருத்துவக் கல்லூரி வாசல்கள், இதிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையில் சுற்றுப்பகுதி என 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!