திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை!

தமிழகத்தில் திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக 3 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரியில் முன்னிலை வகிக்கிறார். பாஜக தனித்து எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மிகவும் பின்தங்கியுள்ளார்.

தென் மாநிலங்களில் புதிய வீச்சை ஏற்படுத்துவோம் என்று பாஜக சூளுரைத்த நிலையில் தமிழகம், புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை நிலவரம் மிகுந்த கவனம் பெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையிலும் அதே போக்கு நீடிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!