இந்தியாவில் லோக் சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. மாநிலங்கள் வாரியாக அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் பொறுப்பேற்றனர்.

லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் தேதி நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை என்பது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது இவ்வாறு கூறியுள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!