நாட்டுக்காக 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினேன் – பிரதமர் நரேந்திர மோடி

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி திமுக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் சமீபகாலமாக போதைப்பொருட்கள் பிடிபட்டு வருவது கவலை அளிப்பதாக கூறினார்.

அத்துடன் ஆளும் திமுக கட்சியினை குடும்ப அரசியல் கட்சி என்றும், ஊழல் செய்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பேசிய மோடி, “எனக்கு குடும்பம் கிடையாது என இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்னை வசைபாட புதிய formula-வை கண்டுபிடித்துள்ளனர்.

எனக்கு 16 வயதானபோது வீட்டைவிட்டு வெளியேறினேன்; எதற்காக வெளியேறினேன்? எனது தேசத்திற்காக வெளியேறினேன்.

எனதருமை மக்களே நீங்கள் தான் என்னுடைய குடும்பம். பாரத நாட்டின் மக்கள் தான் எனக்கு குடும்பத்தார்.

அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகிறேன்” என்றார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!