பொலிஸாரிடம் சிக்கிய இலீக்ஸ் திருடர்கள்

மஸ்கெலியா பகுதியில் விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்ஸ்ல், சுமார் 300 கிலோ கிராம் இலீக்ஸ்சை திருடிச்சென்று விற்பனைச் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விவசாய தோட்டத்தின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!