பயங்கர அடி வாங்கிய ‘லால்சலாம்’! அப்செட்டில் ரஜினி மகள்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால்சலாம் படம் நினைத்த அளவிற்கு வசூல் ஆகாததால் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட படக்குழு பயங்கர அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி சிறப்பு தோற்றத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த லால்சலாம், திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியானது.

ரஜினி படத்தில் இருப்பதால், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியிடப்பட்டது. ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த பாசிடிவ் விமர்சனங்கள் கிடைக்கவில்லை. கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இதனால், தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்தது. வசூலும் குறைய தொடங்கியது. படம் வெளியாகி 3 வாரங்களை தாண்ட உள்ள நிலையில், உலக அளவில் இந்த படம் வெறும் ரூ.32 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதனால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, இயக்குநரும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிக்கு மட்டுமே ரூ.40 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!