குவைத் தீ விபத்து! பிரதமர் மோடி இரங்கல்!

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகியுள்ளனர். குறித்த தீவிபத்தில் தமிழர்கள் இரண்டு பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் இந்திய ரூபாய் நிவாரணம் வழங்க இந்திய பிரதமர் மோடி  தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இச்சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!