டேவிட் மில்லர் அணியை பந்தாடிய கிளாசென் – ப்ரீட்ஸ்கே!

பார்ல் ராயல்ஸ் அணியை SA20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Kingsmead மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் ப்ரீட்ஸ்கே (Breetzke) 43 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார்.

ஹென்ரிச் கிளாசென் (Heinrich Klaasen) 17 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் குவித்தார். ஸ்டோய்னிஸ் தனது பங்குக்கு 38 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் 6 ரன்னிலும், ஜேசன் ராய் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து லுப்பே 6 ரன்களில் வெளியேற, கேப்டன் டேவிட் மில்லர் 3 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் அவுட் ஆனார்.

கேசவ் மகாராஜ், நூர் அகமத்தின் மாயாஜால சுழலில் பார்ல் அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதனால் பார்ல் ராயல்ஸ் அணி 13.2 ஓவரில் 83 ரன்களுக்கு சுருண்டது. மிட்சேல் வான் பியூரென் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 36 (27) ஓட்டங்கள் எடுத்தார்.

டர்பன் தரப்பில் நூர் அகமது 5 விக்கெட்டுகளையும், மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், டாப்லே, ஸ்டோய்னிஸ் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!