சாதனை சதம் விளாசிய கே.எல் ராகுல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசி சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார்.

செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியாவின் இன்னிங்சில் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சொதப்பிய நிலையில் விக்கெட் கீப்பர் கே. எல். ராகுல் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசினார்.

அதிரடியாகவும் விளையாடிய ராகுல் 137 பந்துகளில் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் அவர் சாதனைப் பட்டியலில் இணைந்தார். அயல்நாட்டு மண்ணில் சதம் அடித்த 8வது இந்திய விக்கெட் கீப்பர் ராகுல் ஆவார்.

அதேபோல்SENA என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 4 அணிகளுக்கு எதிராக சதம் விளாசிய 2வது விக்கெட் கே.எல். ராகுல் ஆவார்.

இதற்கு முன்பு ரிஷாப் பாண்ட் இந்த சாதனையை செய்திருந்தார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!