8 லட்சம் டொலர்கள் செலவில் பல்செட் வைத்துக்கொண்ட கிம் கர்தாஷியன் முன்னாள் கணவர்

அமெரிக்க ராப் பாடகரான கேன்யே வெஸ்ட் 7.07 கோடி செலவில், தனது பற்களை அகற்றிவிட்டு டைட்டானியம் பற்களை வைத்துக் கொண்டது வைரலாகியுள்ளது.

ஊடக பிரபலம், சமூகவாதி மற்றும் தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர் கிம் கர்தாஷியன் (Kim Kardashian).

இவரது முன்னாள் கணவரும், அமெரிக்க ராப் பாடகருமான கேன்யே வெஸ்ட் (Kanye West) தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

இதற்கு காரணம் அவர் அமைத்துக் கொண்ட டைட்டானியம் பல்செட் தான்.

அதாவது, செயற்கையான டைட்டானிய பற்களை வைத்துக் கொள்ள செய்த செலவு 850,000 அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7.07 கோடி) ஆகும்.

இந்த மதிப்பானது வைரங்களை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் 19 மில்லியன் followers-ஐ கொண்ட கேன்யே வெஸ்ட், தனது ஸ்டோரியில் புதிய பற்களை அமைத்துக் கொண்டதை வெளிப்படுத்தினார். அத்துடன் இவை நிரந்தரமான செயற்கைப் பற்கள் என்று கூறியுள்ளார்.

வைர பல் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் தாமஸ் கான்னெல்லி, பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் ஆன பற்களை கேன்யே வெஸ்டுக்கு பொறுத்தியுள்ளார்.

2022ஆம் ஆண்டில் தன் மனைவியும் பிரபலமுமான கிம் கர்தாஷியனை பிரிந்த கேன்யே வெஸ்டின் சொத்து மதிப்பு 400 மில்லியன் டொலர்கள் (2023யின் படி) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!