‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி யாழில் ஆரம்பம்…

 ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றையதினம் ஆரம்பமானது.
வருடந்தோறும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ‘கார்த்திகை வாசம்’ என்ற மலர்க் கண்காட்சியை நடத்தி வருகிறது.
இவ் வருடமும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகிய இக் கண்காட்சியை  அவைத் தலைவர் சி வி கே சிவஞானம்  திறந்து வைத்தார்.
கௌரி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இத் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்புரைகளை வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்,  சமூக அரசியல் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் வழங்கினர்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்ப்பத்தியாளர்களுடன் இணைந்து இக் கண்காட்சியை நடத்தி வருகிறது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இக் கண்காட்சி இம் மாதம் 30ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம் முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!