மூன்றாவது குழந்தைக்கு தந்தையான கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson) பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கும் வீரர் கேன் வில்லியம்சன். இவரது மனைவி சாரா.

இந்த தம்பதிக்கு 3 வயது மகளும், ஒரு வயது மகனும் உள்ள நிலையில், தற்போது தங்கள் மூன்றாவது குழந்தையை வரவேற்றுள்ளனர்.

அதாவது சாராவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கேன் வில்லியம்சன் நெகிழ்ச்சியுடன் தனது Kane Williamson பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், ‘தற்போது மூன்றாகியிருக்கிறது. அழகிய பெண்ணை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். உங்கள் பாதுகாப்பான வருகைக்கும், உற்சாகமான பயணத்திற்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

கேன் வில்லியம்சனுக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், IPL தொடரில் அவருடன் இணைந்து விளையாடியவருமான டேவிட் வார்னர் (David Warner) “வாழ்த்துக்கள் லெஜண்ட்” என வில்லியம்சனின் பதிவுக்கு கருத்து பதிவிட்டுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!