கள்ளச்சாராய விவகாரத்தில் விசிக ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தொடர்ந்து திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஜுன் 24ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில் விசிகவின் செயலால் ஆளும் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிருக்கு போராடி வருபவர்களை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தொடர்ந்து 2 மேஜர் டிமாண்டுகளை நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவவன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தொடரும் நச்சு சாராய சாவுகள்: “கள்ளக்குறிச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலி! தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் 24.06.2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!