கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காங்கிரஸ் அரசாங்கம் : ராஜ்நாத் சிங்!

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் அரசாங்கம் பதவியில் இருந்தபோது தமிழக கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகள், தற்போது குறைந்திருப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்

இதற்கு இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சிறந்த உறவுகளே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் கச்சத்தீவு பிரச்சினை தீர்வு தொடர்பில் ராஜ்நாத் எதனையும் குறிப்பிடவில்லை. சென்னையில் இடம்பெற்ற பாரதீய ஜனதாக்கட்சியின் கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு என்பது இலங்கைக்கும் இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. எனவே அது இந்திய- இலங்கை கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி பிரதேசமாக இருந்தது.

இந்நிலையில் இந்திய – இலங்கை கடல் பிரதேச உடன்படிக்கையின்படி அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசாங்கம், அதனை இலங்கையின் எல்லைக்குட்பட்டதாக ஏற்றுக்கொண்டதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!