ராமர் கோவில் கட்டுமானத்திற்கு இரும்பு பயன்படுத்தாமைக்கு விளக்கம்

இந்தியாவில் உத்தர பிரதேசம், அயோத்தியில் குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா தலைமையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய எல் அண்ட் டி, டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் லிமிடெட் உட்பட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் கோயில் கட்டுமானத்தில் பங்கேற்றுள்ளன.

அயோத்தி ராமர் கோயில் 57,000 சதுர அடி பரப்பளவில் 3 மாடிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதில் உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளையின் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார்.

இரும்பின் ஆயுள்காலம் 90ஆண்டு வரை மட்டுமே நீடித்திருக்கும். எனவே நீடித்து உழைக்கும் உருக்கை கட்டுமானத்துக்கு பயன்படுத்தி உள்ளோம். இந்திய உருக்குஆணையத்தின் பிலாய் ஆலையில் தயாரிக்கப்பட்ட உருக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் சரயுநதிக்கரையில் அமைந்திருக்கிறது. இதனால் இப்பகுதி மண்ணின் உறுதித்தன்மை பலவீனமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி நிபுணர்களின் ஆலோசனைப்படி 15 மீட்டர் ஆழத்துக்கு அஸ்திவாரம் தோண்டி மண்ணை அகற்றினோம். பின்னர் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட மணலை 14 அடுக்குகளாக நிரப்பினோம். இது கடினமான பாறைக்கு ஒப்பாக மாறியிருக்கிறது.

ராஜஸ்தானின் மக்ரானா பகுதிமார்பிள் கற்களில் தாஜ்மஹால் கட்டப்பட்டு உள்ளது. அதே பகுதி மார்பிள் கற்களில் ராமர் கோயில் கருவறை கட்டப்பட்டுள்ளது.

ரிக்டர் அலகில் 6.5 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால்கூட கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,500 ஆண்டுகள் வரை கோயில் நிலைத்திருக்கும். 1,000 ஆண்டுகள் வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!