வெறும் வயிற்றில் இந்த 3 பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

மூன்று முக்கிய உணவுப் பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அன்றைய நாள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
1. எலுமிச்சை பழம்:
உடலில் உள்ள நச்சுகள், கழிவுகளை வெளியேற்றும் வல்லமை கொண்டது எலுமிச்சை.
ஆகையால், இதனை காலையில் சாறு பிழிந்து, வெந்நீருடன் சேர்த்து பருக வேண்டும்.
அதே போல் இதன் தோலிலும் மருத்துவ குணம் உள்ளது. தண்ணீரை பத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை தோலை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் சருமம் பளபளப்பாகும், உடல் எடையில் மாற்றம் தெரியும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. பூண்டு பால்: 
உடல் ஆரோக்கியம் மேம்பட பூண்டு பால் குடிக்கலாம். உரித்த பூண்டு தட்டி எடுத்துக் கொண்டு, பாலை அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அவற்றுடன் மஞ்சள் தூள், மிளகு தூள், தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் பருக வேண்டும்.
இதன்மூலம் சுவாச கோளாறுகள் நீங்கி, குடல் ஆரோக்கியம் பெறும். செரிமானம் சீராவதுடன், உடல் எடை குறையும்.
பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சினை குணமாகும்.
மேலும் இந்த பாலை முகத்திற்கு தடவி வந்தால் முகப்பரு பிரச்சனைகள் தடுக்கப்படும்.
3. முருங்கை ஈர்க்கு:
முருங்கைக்கீரையை சுத்தம் செய்யும்போது அதில் உள்ள இளம்குச்சிகளைதான் ஈர்க்கு என்பார்கள்.
இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிக நல்லது.
இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் மாத விலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
மேலும் மேனோபாஸ் பிரச்சனையின்போது 40, 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு உண்டாகும் மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகிய உபாதைகள் நீங்கும்.
இந்த குச்சிகளை வைத்து ரசம் செய்து, அதனை கசாயம் போல் குடிக்கலாம்.
வெறும் குச்சிகளை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தாலே வாய்ப்புண் குணமாகும், ஈறுகளில் உள்ள தொற்றுகள் நீங்கும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!