இரவில் நிம்மதியான துக்கத்திற்கு இதை மட்டும் செய்யுங்க!

தற்போது இருக்கும் இந்த நவீன உலகில் முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் பலரும் இரவு நேரங்களில் ஒரு நிம்மதியான தூக்கமின்றி தவித்து வருகின்றன. தூக்கம் இல்லையென்றால் உடல் ரீதியாக, மனரீதியாக அவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே நிம்மதியான தூக்கத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

➣தூங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு 15 நிமிடத்திற்கு முன் ஸ்மார்ட் போன்ஸ், கம்ப்யூட்டர், டேப்லேட் போன்ற எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில், அதில் இருந்து வரும் லைட்டின் வெளிச்சம் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை அடக்குகிறது. இதனால், தூங்குவதற்கு பின் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

➣மாலை 6 மணிக்கு மேல் காஃபி குடிக்காமல் இருப்பது நல்லது. அப்படி இருப்பது கஷ்டம் என்றால் தூங்குவதற்கு முன் காஃபி குடிக்காதீர்கள். ஏனெனில், இரவு நேரங்களில் காஃபி, சோட போன்றவைகள் தூக்கத்தை தொந்தரவு செய்யும்.

➣இரவில் ஒரே நேரத்தில் தூங்க பழகுவது, நல்ல ஒரு தூக்கத்தை கொடுக்கும். அது நாளுக்கு நாள் மாறுபட்டால் நம் உடல் அதற்கு ஏற்ற வகையில் மாற முயற்சிக்கும். ஆனால், ஒரு நிலையான ஓய்வு கிடைக்காமல், தூக்கம் கெடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

➣இரவு தூங்குவதற்கு முன், லைட்டான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. மிகவும் ஹெவியான உணவுகளை எடுத்துக் கொண்டால், அது தூங்கும்போது அசெளகரியத்தை ஏற்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளது.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை கிளாஸ் பால் குடிக்க வேண்டும்?

கோடை கால வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்!

வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இத ட்ரை பண்ணுங்க!