கடைசிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன் விளாசி ஜோ ரூட்! 353 ரன்கள் குவித்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் விளாசியுள்ளது.

ரான்சியில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது.

தொடக்க வீரர் ஜக் கிராவ்லே 42 ரன்களும் பேர்ஸ்டோவ் 38 ரன்களும் எடுத்தனர். 112 ரன்களுக்கு 5 விக்கெட் என சரிவில் இருந்தபோது போக்ஸ் நங்கூர ஆட்டம் ஆடினார்.

126 பந்துகளை எதிர்கொண்ட அவர் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் ஹார்ட்லி 13 ரன்னில் சிராஜ் ஓவரில் போல்டு ஆனார்.

அதனைத் தொடர்ந்து ஓலி ராபின்சன்,ஜோ ரூட் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்த கூட்டணி 102 ரன்கள் குவித்தது. அரைசதம் விளாசிய ராபின்சன் 58 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இதற்கிடையில் ஜோ ரூட் தனது 31வது சதத்தினை பதிவு செய்தார். ரூட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஏனைய வீரர்கள் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் இங்கிலாந்து 353 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இறுதிவரை களத்தில் இருந்த ஜோ ரூட் 122 ரன்கள் குவித்தார்.

இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!