உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பிசோஸ் மீண்டும் முதலிடம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் (Jeff Besoz) உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அமேசானின் பங்குகள் 2022யில் இருந்து ஏறக்குறைய இரு மடங்கு அதிகரித்தன.

ஆனால், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு, 2021யில் இருந்து 50 சதவீத அளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை இழந்தார்.

அதே சமயம் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்களின் தரவரிசையில் பெசோஸ் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

முன்னதாக, மஸ்க் மற்றும் பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

எலான் மஸ்க் 9 மாதங்களுக்கும் மேலாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரூ.80,000 கோடியுடன் களமிறங்கும் அதானி குழுமம்!

ஆனந்த் அம்பானியின் மிரளவைக்கும் வாட்ச் கலெக்சன்!

மார்ச் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு வரும் நல்ல செய்தி?