இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பெருமை உணர்த்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இலங்கையில் முதன் முறையாக நடைபெற்றுள்ளது.

இந்த போட்டி திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையிலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் முருகன் சனிக்கிழமை நிகழ்வை கொடியசைத்தும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளார்.

“ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம், சிலம்பம் சண்டை, படகுப் போட்டி, கடற்கரை கபடி போன்றவற்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் சமூகத்துடன் கலாசார நிகழ்வுகள் மீளமைக்கப்படுவதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.” எனவும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 200க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கும் வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தொடர்கிறது. 1008 பொங்கல் பானைகள் மற்றும் 1500 பரதநாட்டிய நடனக் கலைஞர்களுடன் பொங்கல் விழாவைத் தொடங்குகிறோம் என செந்தில் தொண்டமான் என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!