இங்கிலாந்தில் 25 வயதிலேயே பரிதாபமாக உயிரிழந்த ஜாக்கி!

இங்கிலாந்தில் 25 வயது குதிரை ஓட்டப் பந்தய ஜாக்கி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Keagan Kirkby என்ற இளைஞர் குதிரை ஓட்டப்பந்தயத்தில் ஜாக்கியாக இருந்து வந்தார். பால் நிக்கோல்ஸ் குழுவில் இவர் ஒரு மரியாதைக்குரிய உறுப்பினராக பார்க்கப்பட்டார்.

இக்குழுவில் 2019யில் இணைந்த Keagan, டிசம்பர் 2021யில் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பெற்றார்.

இந்த நிலையில், கென்ட் நகரின் Charing ரேஸ்கோர்ஸில் இறுதி குதிரை ஓட்டப் பந்தயத்தில் Keagan கலந்துகொண்டார்.

போட்டி நடந்துகொண்டிருந்தபோது திடீரென அவர் குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்டார். பார்வையாளர்கள் அவர் கீழே விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து Keagan-ஐ மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முற்பட்டனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிய வந்தது.

Keagan-யின் பயிற்சியாளர் பால் நிக்கோல்ஸ் தனது இரங்கல் பதிவில், ‘வாழ்க்கை சில நேரங்களில் மிகவும் கடினமானது, இன்று நடந்ததை ஒப்பிடும்போது வெற்றியாளர்கள் முக்கியமற்றவர்கள்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!