என்னை வெளியேற்றுவது கடினம்: கமல் சவால்

அரசியலில் இருந்து தன்னை வெளியேற்றுவது கடினம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 7ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால், சென்னையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் 7ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், குறிப்பாக விஜய்யின் முழு நேர அரசியல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,”அது நடிகர் விஜய்யின் பாணி, இது என் பாணி” என்றார்.

மேலும், “என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள். இப்போது நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆனால், என்னை அரசியலில் இருந்து வெளியேற்றுவது என்பது அதைவிட கடினம். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் அரசியலுக்கு வந்தவன்” என தெரிவித்தார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!