கனடாவில் வயதானவர்கள் வேலைக்கு திரும்பும் பரிதாபம்!

கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் வயதானவர்கள் வேலை திரும்பும் நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாக நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் வயதானவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பேசிய அந்த மாகாணத்தில் வாழும் ஜேனட் ப்ரஷ்(77), “தான் இருக்கும் வீட்டிற்கு முன்பைவிட தற்போது வாடகை 250 டாலர்கள் அதிகம் செலுத்த வேண்டி உள்ளது. லீஸ் விதிகள் காரணமாக பல சிரமங்களை சந்தித்து வருகிறேன்.

இதன் மூலம் எதிர்காலம் சிறப்பாக இருக்க முடியாது என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் எங்கள் வீட்டில் ஒரே ஒரு வருவாய்தான் வருகிறது.

எனவே, இதை எல்லாம் சமாளிக்க நான் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வயதில் கடினமான வேலை செய்ய முடியாத என்பதால், தன் அறிவை பயன்படுத்தி செய்யும் வேலையை தேட முடிவு செய்துள்ளேன்” என வேதனையை வெளிப்படுத்தினார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!