தப்புதான்.. மன்னிப்பு கேட்டார் சிவக்குமார்

தமிழ்நாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் சால்வையை தூக்கி வீசிய விவகாரம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து சிவக்குமார் நடந்து சென்றபோது, முதியவர் ஒருவர் அவருக்கு சால்வை போர்த்த முயன்றார். ஆனால், சிவக்குமாரோ சால்வையை பிடுங்கி வீசினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதால், அவரை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சிவக்குமார் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் சால்வையை தூக்கி வீசிய நபர் வேறு யாரும் இல்லை. என் நண்பர்தான், நானும் அவரும் 50 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு நெருங்கிய பழக்கம். இதுபோன்ற சூழலில் அவர் எனக்கு சால்வை அணிவிக்க வந்தார்.

எனக்கு பொதுவெளியில் சால்வை அணிவிப்பது பிடிக்காது என்பதால், ஒரு உரிமையில் அவர் சால்வையை வீசிவிட்டேன். ஆனாலும், பொது இடத்தில் சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!