சென்னையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

இந்த புகாரை தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை உள்பட தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த சோதனையானது 3-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவரது வீடு, அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுமையான சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!