கனடாவில் கடும் குளிர்

கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.

கடும் குளிர் காலநிலை காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும் மிக மோசமான குளிருடனான வானிலை பதிவாகவில்லை.

எனினும் எதிர்வரும் நாட்களில் மறை ஐந்து பாகை செல்சியஸை விடவும் அதிக குளிருடனான காலநிலையை எதிர்நோக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் முகவத்தின் வானிலை ஆய்வாளர் பீட்டர் கிம்பல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் சராசரியாக மறை 9 பாகை செல்சியஸ் முதல் மறை 16 பாகை செல்சியஸ் வரையில் குளிர் நிலவும் என குறிப்பிட்டுள்ளார்.

கடும் குளிருடானான வானிலையில், வீடற்றவர்களுக்கு போதியளவு வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!