உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகர்

உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமான காணப்படும் நகரமாக கனடாவின் ரொறன்ரோ நகரம் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து நெரிசல் அதிகமான நாடுகளின் உலக தர வரிசையில் ரொறன்ரோ மூன்றாம் இடத்தை வகிக்கின்றது.

இந்நிலையில் லண்டன் மற்றும் டப்ளின் ஆகிய நகரங்கள் முதல் இரண்டு இடங்களையும் வகிக்கின்றன.

ரொறன்ரோவில் பத்து கிலோ மீற்றர் தூரத்தைக் கடப்பதற்கு சராசரியாக 29 நிமிடங்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல், வட அமெரிக்காவில், அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக ரொறன்ரோ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நகரங்களை பின்தள்ளி மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகராக ரொறன்ரோ பட்டியலிடப்பட்டுள்ளது.

டொம் டொம் என்ற நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வருடாந்த போக்குவரத்து நெரிசல் குறித்த அறிக்கையை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.

கடந்த ஆண்டில் ரொறன்ரோ பிரஜைகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக 98 மணித்தியாலங்களை இழக்க நேரிட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!