உலகில் விலை உயர்ந்த பொருளில் இதுவும் ஒன்று

கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வசீகரிக்கும் கலை வடிவமாக Calligraphy முறை ஜப்பானில் காணப்படுகின்றது.

இது‘Shodo’ என அழைக்கப்படும் எழுத்துக்களை மிக அழகாக எழுதப்படும் முறையாகும்.

இந்த அழகான பழங்கால நடைமுறைக்கு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்வது அதற்கு பயன்படுத்தப்படும் மை தான்.

எனவே இந்த பதிவில் Japanese Calligraphy-க்கு பயன்படுத்தும் உலகிலேயே விலை உயர்ந்த மை பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

‘Sumi’ என அழைக்கப்படும் ஜப்பானிய கேளிகிராஃபி மை, பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

இது புராதான முறையில் தாவர எண்ணெய், பைன் பிசின் மற்றும் எள் எண்ணெயை எரிப்பது மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. இதை உருவாக்குவதற்கான செயல்முறை மிகவும் கடினமானது.

இந்த மையில் விரும்பிய தரம் மற்றும் நிலைத்தன்மையை அடைய திறமையானவர்களின் பங்களிப்பு மிக முக்கியம். குறிப்பாக இதில் இயந்திரங்களின் பங்களிப்பு இல்லாமல் முழுக்க முழுக்க மனித உழைப்பில் உருவாக்கப்படுகிறமை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!