இன்று யாருக்கெல்லாம் வெற்றிகரமான நாள்?

கார்த்திகை மாதம் 12ம் நாள். 28 நவம்பர், 2023. செவ்வாய் கிழமையான இன்று பகல் 2:39 வரை சுவாதி அதன் பின்னர் விசாகம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, புது பொருட்கள் வாங்குவீர்கள். தொழில் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். புது வாய்ப்புகள் தேடிவரும் ‌நாள் இது.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் கனிவாக பழகுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பொறுமையுடன் அனுகவும். வேலை கடுமையான உழைப்பை கோரும் நாள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, வேலையில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புது நண்பர்கள் கிடைப்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, மிகவும் முன்னெச்சரிக்கையாகவும் கவனத்துடனும் சிறுசிறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உயர் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உங்கள் பணி சிறக்கும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பழைய கடனை திருப்பி கொடுப்பீர்கள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, மறைமுக எதிரிகளால் தடங்கல்கள் நேரக்கூடும். பேசும் பேச்சினை யோசித்து, கவனத்துடன் பேசுவது நன்மை பயக்கும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, சுப காரியங்கள் கைகூடும். புதிய நட்புகள் கிடைக்கும். குடும்பத்தினர் ஆசையினை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் சவாலான வேலைகளை கூட சாதரணமாக முடிக்கும் நாள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிக்கனமாக செலவு செய்ய வேண்டியது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உறவினர்களிடத்தில் சங்கடங்கள் உண்டாகலாம். வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும். மறைமுக தடைகளை சுக்குநூறாக்குவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, பூர்வீக சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சவாலான வேலைகளை புத்திக்கூர்மையால் எளிதாக முடிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024