இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் நினைவுக் சின்னங்களை அழிப்பது தகுந்த செயலா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி??

ஓர் இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும், துயிலும் இவ் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிக்கிறது. அந்த வீரர்களைப் பெற்ற பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள், அவர்களின் பிள்ளைகளின் மனநிலையை ஒருதடவை சிந்தித்துப் பாருங்கள். – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்றைய தினம்  பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவுத் தூபிகள் அகற்றப்பட்டுள்ளன. இதனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இந்த நாட்டில் மக்களின் வரிகளை பெற்றுக்கொண்டு மாளிகைகளும் கோபுரங்களும் கட்டி வைத்துள்ள இராணுவத் தளபதிகள் மற்றும் இராணுவ மேலதிகாரிகளின் பாதுகாப்புக்கென மிகப் பெரும் நிதி செலவிடப்படுகின்றது.
யுத்தம் முடிந்த பின்னும் கோத்தாபய அரசால் இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மேலதிகமாக இணைக்கப்பட்டனர். அவர்கள் மேசன், தச்சுத்தொழில் மற்றும் கூலி வேலைகளுக்காக அமர்த்தப்பட்டார்கள்.
இலங்கை மக்கள் அவர்களின் சம்பளத்துக்கும் சேர்த்து வரி செலுத்தும் நிலைமைக்கு தற்போது தள்ளப்படுள்ளார்கள்.
ஆனால் இந்த அரசில் தற்போதைய செயல்பாடுகள் இன விரோதத்தை மென்மேலும் தூண்டும் விதமாகவும் அவமரியாதை செய்யும் விதமாகவுமே அமைந்துள்ளன.
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவுத் தூபிகள்  அகற்றப்பட்டத்தை நான் மிகவும் துக்ககரமான சம்பவமாக கருதுகின்றேன். – என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

நினைவேந்தலை தடுக்க எவராலும் முடியாது! - சாணக்கியன் - Namthesam Tamil News November 27, 2023 - 5:32 pm
[…] – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மேலும் […]
Add Comment