ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து சாதனை வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tolerance Oval மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்டில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 155 ரன்களும், அயர்லாந்து 263 ரன்களும் எடுத்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹிடி 55 ரன்களும், ரஹ்மத்துல்லா குர்பாஸ் 46 ரன்களும் எடுத்தனர்.

எனினும் ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 218 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆல்அவுட் ஆனது. மார்க் அடைர், மெக்கர்த்தி மற்றும் கிரேக் யங் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதன் பின்னர் 111 ரன்கள் என்ற எளிய இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே நவீத் ஜட்ரான் அதிர்ச்சி கொடுத்தார்.

அவரது பந்துவீச்சில் பிஜே மூர், கர்டிஸ் கேம்பர் டக் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஹாரி டெக்டர் 2 ரன்னில் நடையைக் கட்டினார்.

அடுத்து வந்த பால் ஸ்டிர்லிங் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஜியா உர் ரெஹ்மான் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

எனினும் கேப்டன் ஆண்ட்ரு பால்பிரினி 58 ரன்களும், லோர்க்கான் டக்கர் 27 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்தின் முதல் வெற்றி ஆகும். இதன்மூலம் குறைந்த போட்டிகளில் முதல் வெற்றியை பதிவு செய்த 6வது அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றது.

அயர்லாந்துக்கு அடுத்த இடங்களில் ஜிம்பாப்வே (11), தென் ஆப்பிரிக்கா (12), இலங்கை (14), இந்தியா (25), வங்கதேசம் (35), நியூசிலாந்து (45) ஆகிய அணிகள் உள்ளன.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!