ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி!

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

63 வயதானவர் இப்ராஹிம் ரெய்சி. கடந்த 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2017-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் ரெய்சி கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் தான் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார்.

ரெய்சி இரண்டாவது முறையாக மீண்டும் அதிபர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!