திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த Intel!

Intel  நிறுவனமானது நிதி பற்றாக்குறை காரணமாக திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் Semi conductor உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் (Intel) உள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக 1,31,900 ஊழியர்கள் (2022யின் படி) பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில்  Intel ஊழியர்களுக்கு அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது நிதி நெருக்கடி ஏற்பட்ட காரணத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை  Intel பணிநீக்கம் செய்துள்ளது.

மேலும் பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக, 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது.

இது தவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய பணி நீக்க நடவடிக்கை, டிசம்பர் 31-ம் திகதி துவங்கும் என்றும், இதில் 235 பேர் பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!