புதிய அப்டேட்டில் இன்ஸ்டா

இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனம்,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என உலகின் முன்னணி சமூக ஊடக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் தன்னுடைய பயனர்களை தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கிய வருவது வழக்கம்.

மேலும் பதின்வயதினரினரின் இன்ஸ்டாகிராம் பாவனையை மட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Night time Nudges என்ற புதிய அப்டேட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் 10 நிமிடங்களுக்கு மேல் ரீல்ஸ் அல்லது டிஎம்கள் போன்றவற்றிற்காக இரவில் அதிக நேரம் செலவிட்டால் புதிய இரவுநேர நட்ஜ்கள் தோன்றும்.

தாமதமாகிவிட்டது என்பதை நினைவூட்டுவதோடு, ஆப்ஸை இன்ஸ்டாகிராம் பாவனையை நிறுத்தி விட்டு தூக்க செல்லுமாறு அறிவுறுத்தும். இரவு நேர நட்ஜ்கள் தானாகக் காட்டப்படும், அவற்றை அணைக்க முடியாது.

பயன்பாட்டில் ஏற்கனவே “டேக் எ பிரேக்” அம்சம் உள்ளது, இது பதின்ம வயதினருக்கு இன்ஸ்டாகிராமில் இருந்து வழக்கமான இடைவெளிகளை எடுப்பதற்கான நினைவூட்டல்களைக் காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!