வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

ஐக்கிய இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடம் முதல் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தனியார் வாகனங்களின் இறக்குமதியை தளர்த்துவதில் கவனம் செலுத்துகிறீர்களா என அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர்,

அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக இதனை செயல்படுத்துவோம் என்று நம்புகிறோம். கார் சந்தையில் உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் இருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை.

கார்கள் இறக்குமதியைத் தவிர மற்ற அனைத்தையும் அனுமதித்துள்ளோம். கார்கள் இறக்குமதி நடந்தால், நாடு சுமுக நிலைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகனங்களை படிப்படியாக இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம் என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!